Date:

பாடசாலை மாணவர்களுக்காக மேலதிக பஸ்கள் சேவையில்

பாடசாலை மாணவர்களுக்காக நாளை(15) முதல் ‘சிசு செரிய’ உள்ளிட்ட அனைத்து பஸ்களும் திட்டமிட்ட நேர அட்டவணையின் பிரகாரம் சேவையில் ஈடுபடுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

சுமார் 741 சிசு செரிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

எந்தவொரு சிக்கலும் இன்றி, மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்குத் தேவையான பஸ் சேவைகளை அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கி முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாளை(15) முதல் 90 தொடக்கம் 95 வீதமான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்காக தேவையான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பாடசாலை சேவைகளை முன்னெடுப்பதற்கு போதுமான எரிபொருள் கிடைக்கவில்லை என அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஶ்ரீ சில்வா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...