கண்டியில் புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு தம்பதிக்கு அதிக விலையில் புகையிரத பயணச்சீட்டு விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2,600 ரூபாவுக்கான புகையிரத பயணச்சீட்டை 7,300 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து மற்றுமொரு முன்பதிவு செய்யப்பட்ட புகையிரத பயணச்சீட்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 64 வயதுடையவர் என்பதோடு, இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.