தனது 5 வயது குழந்தையை கத்தியைக் காட்டி கொலை செய்யப்போவதாக மிரட்டும் வீடியோவை மனைவிக்கு அனுப்பிய கொடூரமான தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டிய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மனைவி வெளிநாடு சென்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரை அழைத்து வருவதற்காக அவர் இந்த செயலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நபர் அந்த வீடியோவை மனைவிக்கும் அவரை வௌிநாட்டுக்கு அனுப்பிய நிறுவனத்துக்கும் அனுப்பியுள்ளார்.
குறித்த தந்தையின் செயல் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து குளியாப்பிட்டிய பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
குழந்தையின் கழுத்து பகுதியில் சிறு காயங்களுடன் தழும்புகள் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
தந்தையுடன் செல்ல மறுத்துள்ள சிறுவன் தாய் வரும் வரை உறவினருடன் செல்ல விரும்புவதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.