Date:

மீண்டும் முடங்குமா நாடு?

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 227 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த 227 பேரும் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், கடந்த இரண்டு நாட்களான இருநூறுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால்  மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார பணிப்பாளர் நாயகம்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்  குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில நாட்களாக அதிகளவான நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் அடையாளம் காணப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,  பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து செயற்படுவதோடு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் சுகாதார பணிப்பாளர் நாயகம்  கோரிக்கை விடுத்துள்ளார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...