நாடளாவிய ரீதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 502 லீற்றர் டீசல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாடளாவிய ரீதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 44 ஆயிரத்து 777 லீற்றர் பெற்றோல் மற்றும் 20 ஆயிரத்து 208 லீற்றர் மண்ணெண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் நாடாளாவிய ரீதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆயிரத்து 387 சோதனை நடவடிக்கைகளில் ஆயிரத்து 321 சந்தேக நபர்கள் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன்ர்.
இதனிடையே, நேற்றைய தினத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேக நபர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சோதனை நடவடிக்கையில் 2 ஆயிரத்து 14 லீற்றர் பெற்றோல், 238 லீற்றர் டீசல் மற்றும் 20 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியன பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.