இலங்கையின் 09 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்துக்கான செலவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
09 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு ஆகஸ்ட் 3 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தேநீர் விருந்தளித்தார்.
இந்த விருந்திற்கான செலவு ரூ. 272,000 ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தி செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி விக்ரமசிங்கவின் சார்பில் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் செயலாளரான ஆஷு மாரசிங்க இதற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளார்.