காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து காலி முகத்திடலில் இருந்து வெளியேறுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக போராட்டத்தின் ஒரு அங்கமாக இருந்த சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறுவது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராது.
நகரங்களிலும் வட்டார அளவிலும் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.