தனியார் துறையில் பெண்களை மாலை 6 மணிக்கு பின்னர் பணிக்கு அமர்த்தும் கடைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
இலத்திரனியல், கணனி மற்றும் தகவல் தொழிநுட்ப துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.