Date:

Hayleys Fabric 2022 சர்வதேச தர நிலை விருது வழங்கும் நிகழ்வில் பேண்தகைமைக்கான விருதை வென்ற ஹேலிஸ்

லண்டனில் அண்மையில் இடம்பெற்ற 2022 சர்வதேச தர விருது வழங்கும் நிகழ்வில் (IQA) பேண்தகைமைக்கான விருதைப் Hayleys Fabric பெற்றுள்ளது. சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) உத்திகள் மூலம் பேண்தகைமையை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பின் காரணமாக Hayleys Fabric இந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது.

உலகிலுள்ள ஜவுளி தயாரிப்பாளர்களை பின்தள்ளி, இலங்கையின் மிகப் பெரிய ஜவுளி உற்பத்தியாளரான Hayleys Fabric, IQAக்கு புதிதாக இந்த பேண்தகைமை விருதை வென்றுள்ளமை முழு இலங்கை ஆடைத் துறையினருக்கும் பெருமையளிக்கும் விடயமாகும்.

பேண்தகைமை என்பது எங்கள் முக்கிய மதிப்புகளில் ஒன்றாகும், மேலும் எங்கள் தாய் நிறுவனமான Hayleys குழுமம் எப்போதும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த எங்களுக்கு வழிகாட்டுகிறது. உற்பத்தி செயல்முறை முதல் விநியோகம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் ஆடைத் தொழிலின் சுற்றுச்சூழல் தாக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, எதிர்மறையான விளைவுகளை குறைக்க முன்னுரிமை அளிக்கிறோம். ESGக்கான வழிகாட்டியான Hayleys Lifecodeஐ அறிமுகப்படுத்துவது, பேண்தகைமைக்கான எங்கள் நோக்குநிலைப் பார்வையை வலுப்படுத்துகிறது.” என Hayleys Fabricஇன் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஹான் குணதிலக்க தெரிவித்தார். “அண்மையில் ISPO Textrends விருது வழங்கும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட WARNA இந்த உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். எங்களின் பேண்தகைமை முயற்சிகள் IQAஆல் அங்கீகரிக்கப்பட்டு இலங்கையின் நிபுணத்துவத்தை சர்வதேச தளத்தில் வெளிப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என அவர் மேலும் கூறினார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து தனது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் Hayleys Fabric waste-to-fashionஐ பயன்படுத்தி நவநகரீகம் பற்றி கவனம் செலுத்தியுள்ளது. அண்மையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற Hayleys Fabric ஆர்கானிக் Mahogany சாயம் அதற்கான வலுவான முயற்சியாகும். Hayleys Fabric உற்பத்தி செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் ESG உத்திகளை ஏற்றுக்கொள்கிறது, பசுமையான சூழலுக்கான அதன் அர்ப்பணிப்பு மற்றும் பசுமையான எதிர்காலத்திற்கான அதன் இலக்குகளை அடைவதற்கான அதன் திட்டத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதன் விளைவாக, காலநிலை நடவடிக்கைகள் மற்றும் நீர் பாதுகாப்பு உட்பட ஐக்கிய நாடுகளின் பேண்தகைமையான அபிவிருத்தி இலக்குகளில் 17இல் 14 உடன் ஒத்துப் போனதன் காரணமாக Hayleys Fabricக்கு இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாங்கள் தேர்ந்தெடுத்த வெற்றியாளர், அனைத்து பரிமாணங்களிலும் நிறுவனம் முழுவதும் பேண்தகைமையை நிலைநாட்டுவதற்கான நீண்டகால அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளது. IQA விருதுகளின் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில், அவர்கள் பேண்தகைமையை உறுதிசெய்யும் திட்டத்தைப் பின்பற்றுவதையும், நீரின் தரத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் மக்களின் நல்வாழ்வு உறுதி செய்யப்படுவதையும் நாங்கள் எப்போதும் கவனித்து வருகிறோம். அங்கு Hayleys Fabricன் உயர் அர்ப்பணிப்பு மற்றும் பேண்தகைமையை உறுதி செய்வதற்கான இடைவிடாத முயற்சிகளை நாங்கள் கண்டறிந்தோம். இது மிகப்பெரிய சாதனை” என பேண்தகைமைக்கான Hayleys Fabric அர்ப்பணிப்பு குறித்து IQA நடுவர்கள் குழு, கருத்து தெரிவித்தது.

Jacobs மற்றும் Troup Bywaters+ Anders போன்ற உலகளாவிய பெரிய அளவிலான உற்பத்தியாளர்களை விஞ்சி இலங்கையின் பெயரை உலகிற்கு எடுத்துச் சென்ற Hayleys Fabric நிறுவனத்தை பெருமைப்படுத்துவதற்கு ஒரு நாடாக நாம் அனைவருக்கும் இது ஒரு வாய்ப்பாகும். Hayleys Fabric PLCஆனது இலங்கையில் ஜவுளி உற்பத்தியில் முன்னோடியாக விளங்குவதுடன், வடிவமைப்பு முதல் உற்பத்தி வரை பயனுள்ள தீர்வுகளை வழங்கும் திறன் கொண்டது. இலங்கையில் மாதாந்தம் 6 மில்லியன் மீற்றருக்கும் அதிகமான துணி உற்பத்தி திறன் கொண்ட நிறுவனம், உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற நவ நாகரீக மற்றும் ஆடை வர்த்தக நாமங்களில் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காதி நீதிமன்ற நீதிபதி கைது

கெலியோயாவில் உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் ரூ. 200,000 லஞ்சம்...

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373