இலங்கையின் முன்னணி முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட அலுமினிய உற்பத்தியாளரும், Haleys குழுமத்தின் அங்கத்தவருமான Alumex, உற்பத்தி மற்றும் உருமாற்றப் பிரிவின் புதிய உறுப்பினராக Aluminium Stewardship முன்முயற்சி (ASI) வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளது.
ASI என்பது ஒரு இலாப நோக்கற்ற தரநிலை அமைப்பு மற்றும் சான்றிதழ் அமைப்பாகும், இது ஒரு நிலையான சமுதாயத்திற்கு அலுமினியப் பொருட்களின் பங்களிப்பை மேம்படுத்த உறுதிபூண்டுள்ள உற்பத்தியாளர்கள், பாவனையாளர்கள் மற்றும் பங்குதாரர்களை மதிப்பீடு செய்கிறது. இந்த தரநிலைகளை பின்பற்றும் முதல் இலங்கை உற்பத்தியாளர் என்ற வகையில், பொறுப்பான உற்பத்தி, ஆதாரம் மற்றும் பொறுப்பேற்பை வளர்ப்பதற்கு உறுப்பினர்களுடன் இணைந்து அலுமெக்ஸ் நடவடிக்கை எடுக்கும்.
“இலங்கையின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் என்ற வகையில், எமது வர்த்தகம் மற்றும் உற்பத்தி செயல்முறைகளில் பேண்தகைமையை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் நன்கு அறிவோம். வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதன் மூலம் நாங்கள் எப்போதும் ASI திட்டத்தை ஆதரிக்கிறோம். இது இலங்கை மக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மத்தியில் வேகமாக விரிவடைந்து வரும் எமது ஏற்றுமதிச் சந்தைக்கும் அடிப்படையில் முக்கியமானது என நாங்கள் நம்புகின்றோம்.” என Alumexஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரமுக் தெதிவல தெரிவித்தார்.
ASI சான்றிதழ் திட்டம் இரண்டு தரநிலைகளுக்கான சான்றிதழை வழங்குகிறது: ASI செயல்திறன் தரநிலை மற்றும் ASI பொறுப்பேற்பு தரநிலைகள் வலைப்பின்னல். முதலாவது சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகைக் கொள்கைகள் மற்றும் பேண்தகைமையைக் குறிக்கும் அளவுகோல்களை வரையறுக்கிறது, இரண்டாவது பொருள் பராமரிப்புக்கான தேவைகளை வரையறுக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் அலுமினிய கழிவு சேகரிப்பு மையங்களை நிறுவுவதன் மூலம் பேண்தகைமைக்கான அதன் உறுதிப்பாட்டை Alumex வலுப்படுத்தியுள்ளது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க நவீன இயந்திரங்களுடன் அதன் மறுசுழற்சி வசதியை மேம்படுத்தியுள்ளது. சப்புகஸ்கந்த Alumexஇல் இந்த புதிய வசதிகள் மூலம் மாதாந்தம் 1200 மெற்றிக் தொன் அலுமினிய கழிவுகளை மறுசுழற்சி செய்ய முடியும் மேலும் 1200 மெற்றிக் தொன்களால் மேம்படுத்த முடியும். மேலும் ஆண்டு மறுசுழற்சி திறன் 28,800 மெற்றிக் தொன் ஆகும். ஜூலை 2022க்குள் அதன் வணிகச் செயல்பாடுகள் தொடங்கப்படுவதால், இது இலங்கையின் மிகப்பெரிய அதிநவீன அலுமினிய மறுசுழற்சி ஆலையாக இருக்கும்.
சமீபத்தில், Alumex வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகத்திற்கான வலுவான அர்ப்பணிப்புக்காக ஆசியா ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகளில் அங்கீகரிக்கப்பட்டது. பங்குதாரர்களுக்கான மதிப்பை உருவாக்குவதற்காக ஒருங்கிணைந்த அறிக்கை (SME) பிரிவில் Alumex வெண்கல விருதையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.
ASIஆனது 2012இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து Aluminium Stewardship முன்முயற்சி அமைப்பாக இருந்து வருகிறது, இது தொழில்துறையானது பொறுப்பான மற்றும் நெறிமுறை, சமூக மற்றும் சுற்றுச்சூழல் செயல்திறன் நடைமுறைகள் மற்றும் மேம்பாடுகள் பற்றிய தகவல்களை சுயாதீனமான மற்றும் நம்பகமான விநியோகங்களை வழங்க உதவுகிறது. தற்போது உலகளவில் 232 ASI உறுப்பினர்கள் மற்றும் 128 ASI செயல்திறன் தர சான்றிதழ்கள் மற்றும் 51 ASI Stewardship தரநிலைகள் வலைப்பின்னல் சான்றிதழ்களும் உள்ளன. ASI உறுப்பினர்கள் உலகம் முழுவதும் 47 நாடுகளில் பரந்து விரிந்துதுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.