Date:

இணைய வழியில் இன்று முதல் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள்

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழியில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சான்றிதழ்களை இணைய வழியில் மூலம் பெற்றுக் கொள்வதற்காகக் கையடக்க தொலைப்பேசி மற்றும் கணினி வழியாக ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம் அத்துடன், கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி இதற்கான கட்டணங்களைச் செலுத்த முடியும்.
விரைவுத் தபாலில் அல்லது மிக அருகாமையில் இருக்கும் பிரதேச செயலகத்திலோ சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
https://online.ebmd.rgd.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிர வேசித்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான கோரிக் கையைச் சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் www.rgd.gov.lk என்ற இணைய தளத்திலும் 011 2889518 என்ற தொலைபேசி இலக்கத் துடன் தொடர்பு கொள்வதன் மூலமும் இது தொடர்பான தகவல் களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் உலகப் பாரம்பரியத் தளம் சேதம் – UNESCO கவலை!

யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட, தெஹ்ரானில் உள்ள...

போர் பதற்றத்தால் தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள்...

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை வழக்கறிஞர் எஸ்.கே. சங்கக்கார காலமானார். அவரது உடல்...

14 நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற அவசர எச்சரிக்கை; ரியாத்திலுள்ள தூதரகத்தின் மீதும் தாக்குதல்

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு...