Date:

வரவிருக்கும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ள பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் விசேட நடவடிக்கை

இலங்கையின் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் (RPCs) தமது நிலங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை அதிகரிக்க புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளன. அதேவேளை உணவுப் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கு தமது ஊழியர்களுக்கு விசேட ஆதரவை வழங்கி வருகின்றன.

மொத்தத்தில், RPCகளுக்குச் சொந்தமான 21 தோட்டங்கள் நேரடி பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன அல்லது தினசரி நுகர்வுக்காக பயன்படுத்தப்படும் குறுகிய கால பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த பயிர்கள் RPCக்கு சொந்தமான தோட்டங்களில் பணிபுரியும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் மற்றும் RPCக்கு சொந்தமான தோட்டங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்படுகின்றன. அரசாங்க நிறுவனங்களின் ஆதரவுடன், RPCகள் தங்கள் சொந்த செலவில் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளன, மேலும் பயிர்ச் செய்கைக்கு தேவையான விதைகள் மற்றும் தாவர உர வகைகள் போன்ற உள்ளீடுகளையும் வழங்கியுள்ளன. தோட்ட மனித அபிவிருத்தி அறக்கட்டளை (PHDT), விவசாயம் மற்றும் விவசாய சேவைகள் திணைக்களம் மற்றும் இத்திட்டத்தின் பயனாளிகளின் ஆதரவுடன் RPCகள் இதுவரை 578 மாதிரி தோட்டங்களையும் சுமார் 7,000 தோட்டங்களையும் நிறுவியுள்ளன. இந்த பங்குடைமையின் மூலம் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களைச் சுற்றி 1000 மாதிரி தோட்டங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் மேலும் 20,000 தோட்டங்கள் RPC தோட்டங்களில் மேம்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் இலாபத்திற்காக அல்ல மேலும் பெருந்தோட்ட சமூகங்களுக்கான உணவு பாதுகாப்பை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இது குறிப்பிட்ட RPC தொழிலாளர்கள் தங்கள் உபரி பயிர் விளைபொருட்களை மானிய விலையில் விற்பதன் மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்ட உதவும்.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை, “இலங்கை தற்போது முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மூன்று வேளை உணவு கூட கிடைக்காத குடும்பங்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படக் கூடிய சாத்தியம் உள்ளது. RPCகளாகிய நாங்கள் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினை மிகுந்த நிலையை உணர்ந்தோம். இந்தச் சூழலைப் எதிர்கொள்வதற்கு பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது இந்த நேரத்தில் அனைத்து தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களின் கடமை என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.

தோட்டங்களில் உள்ள மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுவதன் மூலம், வரவிருக்கும் உணவுப் பற்றாக்குறையைத் தவிர்க்கும் இந்த தேசிய முயற்சிக்கு எங்களால் இயன்றதைச் செய்வதை RPCகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. உணவு மற்றும் அத்தியாவசிய உலர் உணவுகளை விநியோகித்தல் மற்றும் சத்தான உணவை வழங்குவதற்காக சமூக சமையலறைகளை அமைப்பதன் மூலம் உணவு விலைகளின் உச்ச அளவிலான அதிகரிப்பின் தாக்கத்திலிருந்து எங்கள் தொழிலாளர்களை பாதுகாக்க RPCகள் தொடர்ச்சியான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.” என இராஜதுரை மேலும் தெரிவித்தார்.

உணவு நெருக்கடியின் அச்சுறுத்தலுக்கு முன்னரே செயற்பட்டு, RPCகள் சில பயனாளிகளுடன் இணைந்து தோட்டங்களைச் செய்ததோடு சில தோட்டங்களுக்கு நேரடியாகவும் பங்களித்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் மரவள்ளிக்கிழங்கு, கிழங்கு, சோளம், உருளைக்கிழங்கு, வாழை, மிளகாய் மற்றும் கத்தரி, மற்றும் கறி மிளகாய், வெண்டைக்காய், பீட்ரூட் மற்றும் கேரட் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

உலகளாவிய உணவு நெருக்கடி மற்றும் உள்நாட்டு உணவுப் பொருட்களின் விலைகள் பெருந்தோட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான அதிகரிப்பின் தாக்கத்தை குறைப்பதற்கு இந்த சரியான நேரத்தில் இவ்வேலைத்திட்டம் உதவும். இலங்கை மத்திய வங்கியின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) படி, இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஜூன் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 76% அதிகரித்துள்ளது.

இந்த முயற்சிகளின் அடிப்படையில், PHDT ஆனது RPCக்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களின் ஆதரவுடன் RPCs தோட்டங்களில் இயங்கும் சதொச கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை தோட்ட மக்களுக்கு வழங்கியுள்ளது. பணியாளர்கள் இந்தக் நிலையங்களில் கடனுக்கு பொருட்களை வாங்கி, ஊதியத்தைப் பெற்ற பிறகு திருப்பிச் செலுத்த முடியும்.

மேலும், சில RPC தோட்டங்களில் ஊழியர்களுக்கு மதிய உணவுத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தோட்ட மக்களின் குடும்ப உறுப்பினர்களின் சுகாதார நிலையை ஆராயவும், போஷாக்கு மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் அவர்களின் அறிவை மேம்படுத்தவும் PHDT நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காதி நீதிமன்ற நீதிபதி கைது

கெலியோயாவில் உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் ரூ. 200,000 லஞ்சம்...

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373