Date:

மரக்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடும்- பொருளாதார மத்திய நிலையங்களின் குழு

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக விளைச்சல்கள் சேதமடைந்துள்ளமையினால் எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலை 40 முதல் 50 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் குழு தெரிவித்துள்ளது.

மலைநாட்டு மரக்கறிகளின் விலை 60 முதல் 70 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என்று அதன் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோகிராம் கரட் மொத்த விற்பனையின் கீழ் 260 ரூபா முதல் 290 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோவா ஒரு கிலோகிராம் 230 ரூபா முதல் 260 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

லீக்ஸ் 130 ரூபாவிலிருந்து 170 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் மரக்கறிகளின் விலை 40 முதல் 50 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் குழுவின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று...

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட...

நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி...

இன்று முதல் தபால் கட்டணங்களில் திருத்தம்

இன்று (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை...