Date:

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனிப்பட்ட இலாப எதிர்பார்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டும்

19 ஆவது திருத்தத்தை நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வந்ததாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அதனை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் எனவும், தற்சமயம் துறைசார் மேற்பார்வைக் குழு அமைப்புக்கு அப்பாற்பட்ட, புதிய சக்தி வாய்ந்த குழு முறையின் ஊடாக பாராளுமன்றத்தை முனைப்புடனான பொது கூட்டு வேலைத்திட்டத்தின் ஊடாக வழிநடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதற்கு அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைப்பது மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த பாரதூரமான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டில் சாதாரண சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதே அனைவரினதும் பொதுவான இலக்காகும் எனவும், அதற்காக தமது தனிப்பட்ட இலாப எதிர்பார்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டும் எனவும், இது வெறும் பதவிப் பரிமாற்றமாக இருக்காது, குழு அமைப்பு மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் முனைப்பாக பங்களிப்பை வழங்கக்ககூடிய ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது சர்வ கட்சிகளின் கூட்டு வேலைத்திட்டம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்கு அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சட்டத்தை மீறி வன்முறையை பரப்பிய நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் சிவில் பொது சமூகத் தலைவர்களை ஒடுக்கி வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது குறித்து ஜனாதிபதி கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இத்தருணத்தில்,எமது நாடு வீழ்ந்துள்ள வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு மிகவும் சாதகமான தலையீட்டை மேற்கொள்வதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக எதிர்க்கட்சியின் மூச்சு மற்றும் பிரபஞ்சம் வேலைத்திட்டங்களை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், நாடளாவிய ரீதியில் அவற்றை இன்னும் முனைப்புடன் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...