Date:

வழமையான பேரூந்து சேவைகளுக்கு கட்டணங்கள் திருத்தம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் போக்குவரத்து அமைச்சரின் அனுமதியின் கீழ் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தபட்ச பேரூந்துக் கட்டணம் 34 ரூபாவாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.

 

புதிய பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகக் கலந்துரையாடலில் கலந்து கொண்டே அவர் இதனை தெரிவித்தார்.

 

இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட பேரூந்து கட்டணத்தில் இருந்து 10 சதவீதத்தினை குறைத்தல் மற்றும் மேலும் அண்மையில் திருத்தப்பட்ட டீசல் விலையை கருத்தில் கொண்டு பேரூந்து கட்டணத்தினை 11.14 சதவீதத்தினால் குறைக்கப்பட வேண்டும் என கணக்கிட்டு குறைந்தபட்ச பேரூந்து கட்டணத்தை 38 ரூபாவில் இருந்து 34 ரூபாவாக குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

350 வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கான கட்டணங்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது. புதிய திருத்தப்பட்ட கட்டணங்கள் நள்ளிரவு முதல் அறவிடப்பட வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபை மற்றும் வீதிப்பயணிப் போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மிராண்டா மேலும் தெரிவித்தார்.

வழமையான பேரூந்து சேவைகளுக்கு மாத்திரமே இவ்வாறு பேரூந்து கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பணிப்பாளர் நாயகம் சிசு செரிய மாகாண பேரூந்துகள் கெமி செரிய காலை மற்றும் இரவு விசேட பேரூந்துகள் மற்றும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பொது பாடசாலை சேவை பேரூந்துகளுக்கும் இக்கட்டண திருத்தம் பொருந்தும் எனவும் சுட்டிக்காட்டினார்.

 

புதிய கட்டணத்திருத்தங்களுக்கு அமைவாக கட்டணங்கள் அறவிடப்படுகின்றதா என பரிசோதிப்பதற்காக நடமாடும் பரிசோதகர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஏதேனுமொரு வகையில் பற்றுச்சீட்டுகளை வழங்காமை அல்லது அதிக கட்டணத்தினை அறவிடின் 1955 என்ற இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடொன்றை பதிவு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற SUN Awards 2025 நிகழ்வில் ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), அதன் வருடாந்திர SUN...

குடு மாலியின் மகள் – இப்படி ஒரு சீரழிவு…

மாரவில, மாரடை பகுதியில், செவ்வாய்க்கிழமை ( 22) ஆம் திகதி இரவு...

சம்பூர் மனித புதைகுழி: 30 க்கு பின்னர் தீர்மானம்

எஸ்.கீதபொன்கலன் சம்பூரில் மனித மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட காணியில் தொடர்ந்து...