முட்டை விலை அதிகரிப்பு

பண்டிகைக் கால நெருக்கக்கம் மற்றும் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக சந்தையில் முட்டையின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.

 

 

 

தற்போது சந்தையில் ஒரு முட்டை 42 ரூபாவுக்கும் 45 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அநுரசிறி மாரிசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

 

பெய்துவரும் அதிக மழை காரணமாக கோழிகளின் முட்டை உற்பத்தித் திறன் 80 சதவீதத்திலிருந்து 50 – 60 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

 

 

 

கோழித் தீவனத்திற்குத் தேவையான மக்காச்சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை கடந்த காலங்களில் அதிகரித்தமை உற்பத்திச் செலவை உயர்த்தியுள்ளது.

 

 

 

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தையொட்டி பேக்கரி உற்பத்திகள் சூடுபிடித்துள்ளமையால், பேக்கரிகளுக்கு முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

 

 

 

இது செயற்கையாக உருவாக்கப்பட்ட விலை உயர்வு அல்லவென்றும், தேவை மற்றும் வழங்கலில் (Demand and Supply) ஏற்பட்டுள்ள சமநிலையின்மையே இதற்குக் காரணம் என்றும் அநுரசிறி மாரிசிங்க விளக்கமளித்துள்ளார். மேலும், முட்டையின் இந்த விலை உயர்வானது எதிர்வரும் ஜனவரி மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தரம் 6 க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2026ஆம் ஆண்டில் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் பாடசாலைகளில் தரம் 6க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள்...

மலையக மக்களின் உரிமைகள் மற்றும் வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பிரதி...

  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் உண்மையான மற்றும் நிலையான அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு, மக்களுக்காகத் தயாரிக்கப்பட்ட மக்கள்...