இலங்கையை நெருங்கும் புயல் அபாயம்? – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் இன்று (15) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட விசேட எச்சரிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதற்கமைய, இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, இந்தத் தாழமுக்கம் திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இந்தத் தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரையிலிருந்து விலகி வடக்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து வருவதுடன், நாளை (16) காலை ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும், நாளை இரவு தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் இது புயலாக வலுவடையக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் கட்டமைப்பு நவம்பர் 17ஆம் திகதியளவில் தீவிர புயலாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அத்துடன், நவம்பர் 18ஆம் திகதியும் தீவிர புயலாகத் தொடரக்கூடிய இந்தக் கட்டமைப்பு, நவம்பர் 19ஆம் திகதி காலை மிகவும் தீவிரமான புயலாக மேலும் வலுவடையக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 

இதேவேளை, காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையான கடற்பரப்பிலும், பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பிலும் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

குறித்த கடற்பரப்புகளில் ஏற்கனவே மீன்பிடி மற்றும் கடல் பயண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான கடற்பகுதிகளுக்குச் செல்லுமாறும் விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்தத் தாழமுக்கத்தின் நகர்வு மற்றும் வலுவடைதலை வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இராஜாங்கனே சத்தாரதன கைது

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள்...

ஞானசாரவுக்கான 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது

இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு...