இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, அந்த நாட்டின் ஐந்து முக்கிய நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் நடைபெற்ற தேர்தலில், நெதன்யாகுவின் கூட்டணி 120 இடங்களில் 53 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. அதேவேளை, எதிர்க்கட்சிகள் 67 இடங்களுடன் பெரும்பான்மையைப் பெற்றுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், நெதன்யாகுவின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் அரபுச் சமூகக் கட்சிகளுடன் இணைந்து யூத-அரபு கூட்டு அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
‘ஸ்டாண்டிங் டுகெதர்’ (Standing Together) அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டங்கள் டெல் அவிவ், ஜெருசலேம், ஹைஃபா, பீர்ஷேபா மற்றும் தய்பே ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அரபுச் சமூகக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைக்குமாறு காடி ஐசென்காட், நாஃப்தாலி பென்னட் மற்றும் யாயிர் லேபிட் ஆகிய எதிர்க்கட்சித் தலைவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.


