அனோஜனை நேரில் சென்று சந்தித்த இலங்கைத் தூதுவர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனின் சுகநலன்களை விசாரிப்பதற்காக, அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத், அவர் அடைக்கப்பட்டுள்ள தம்மாம் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்றுள்ளார்.

 

ரியாத் தலைநகரில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தச் சிறைச்சாலைக்குச் சென்ற தூதுவர், அனோஜன் சிவராசாவைச் சந்தித்து அவரது தற்போதைய நிலைமை மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்துக் கேட்டறிந்துள்ளார்

 

இந்த விஜயத்தின் போது தூதுவர், அனோஜனுடன் விரிவாகக் கலந்துரையாடியதாக அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்போது அவரது தேவைகள் மற்றும் தற்போது அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அனோஜனுக்குத் தேவையான அனைத்து தூதரக (Consular) மற்றும் சட்ட உதவிகளையும் வழங்குவதற்குத் தூதரகம் கடமைப்பட்டுள்ளதாகத் தூதுவர் இதன்போது மீண்டும் ஒருமுறை உறுதி அளித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் நேரடித் தொடர்பாடல்களை இலகுபடுத்தும் வகையில், தூதுவரைத் தனிப்பட்ட ரீதியில் தொடர்புகொள்வதற்கான தகவல்களும் அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து அனோஜன் சிவராசா நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், சவூதி சிறை அதிகாரிகளால் அவரது நலன்புரி விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கைத் தூதுவர் இந்த விஜயத்தின் போது தம்மாம் மத்திய சிறைச்சாலையின் பணிப்பாளர் மற்றும் சிறைச்சாலை வைத்திருடனும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.       தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவு...

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில்...