சவுதியில் இரண்டு விமான நிலையங்கள் மீது தாக்குதல்: மூவர் பலி, 36 பேர் காயம்!

சவுதி அரேபியாவின் அப்ஹா (Abha) மற்றும் கிங் காலித் (King Khalid) சர்வதேச விமான நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 36 பேர் காயமடைந்துள்ளதாக சவுதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

 

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 

இதில் அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

 

அதேபோன்று, ரியாத் நகரில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

 

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும், விமான நிலைய வசதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உரிய தரப்பினருடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பிரதமர் மோடிக்கு திருமண அழைப்பு விடுத்தார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜ் ஆகியோரின் திருமணம் எதிர்வரும் டிசம்பர் 4ஆம்...

சச்சினுடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசர் வில்லியம்!

மும்பைக்கு மூன்று நாள் பயணமாகச் சென்றுள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து பெண் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி...