அமெரிக்க தடை எச்சரிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விளக்கம்!

இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கினால், இலங்கைக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது.

 

அதன்படி, அமெரிக்காவின் இந்த இரண்டாம் நிலைத் தடைகள் (Secondary Sanctions) என்பது ஏதேனும் குறிப்பிட்ட ஒரு நாட்டையோ அல்லது இலங்கையையோ இலக்கு வைத்துப் விதிக்கப்பட்டது அல்ல என வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளர் நாயகமுமான துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

 

மாறாக, இது உலகம் முழுவதற்கும் பொதுவாக நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்காவின் சாதாரண உலகளாவிய கொள்கை மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் சிக்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்களுக்குத் தேவையான அத்தியாவசியச் சேவைகளை வழங்கினால், இலங்கை மீது தடைகள் விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளதாக அமெரிக்காவின் ‘வோல்ஸ்ட்ரீட் ஜர்னல்’ (The Wall Street Journal) செய்தியொன்றை வெளியிட்டிருந்த நிலையிலேயே வௌிவிவகார அமைச்சு இந்த விளக்கத்தை அளித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ரோசி சேனாநாயக்கவின் மகனும், பாராளுமன்ற வேட்பாளருமான கனிஷ்க சேனாநாயக்க 41 ஆவது...

கொழும்பு மாநகர முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் மகனும், கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற வேட்பாளருமான கனிஷ்க சேனாநாயக்க தனது 41ஆவது வயதில்...

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

இலங்கையின் மேல், வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், மன்னார் மாவட்டத்துக்கும் கடுமையான மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...