கொழும்பு வுல்பெண்டால் மகளிர் பாடசாலையில் சிறுவர் தினத்தை முன்னிட்டு ஊடக விழிப்புணர்வு நிகழ்வு!

‘ஜொயின் அஸ் வேர்ல்ட் வைட்’ (Join Us Worldwide) அமைப்பின் ஏற்பாட்டில், உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு வுல்பெண்டால் மகளிர் உயர் பாடசாலையில் (Wolfendhal Girls’ High School) சிறுவர் தினக் கொண்டாட்டமும் ஊடக விழிப்புணர்வு செயற்பாடும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ‘ஸ்கை லங்கா’ ஊடக வலைமைப்பின் ஊடகவியலாளர் ஆஷிகா ஃபர்சான் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு ஊடகவியல் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு உரையாற்றினார்.

 

எதிர்காலச் சந்ததியினர் தவறான வழிகளில் செல்வதைத் தடுத்து, ஊடகவியல் போன்ற பயனுள்ள கலைகளையும் பயிற்சிகளையும் கற்றுத் தேற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில், ‘ஜொயின் அஸ் வேர்ல்ட் வைட்’ அமைப்பின் பணிப்பாளர் அல்ஹாஜ் எம். எம். ஷாஃபி அவர்களால் இத்திட்டம் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி, அவர்களுக்குப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிகழ்வின் போது தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் ‘ஜொயின் அஸ் வேர்ல்ட் வைட்’ அமைப்பின் பணிப்பாளர் எம். எம். ஷாஃபி, மேலாண்மைப் பணிப்பாளர் எம். எச். எம். ஃபர்ஹான், இளைஞர் விவகாரப் பொறுப்பாளர் எஃப். நிஸாயா, உறுப்பினர் எஃப். ஷியாமா, ‘கொழும்பு கிங்ஸ் யூத் கிளப்’ அமைப்பின் பொருளாளர் எஃப். ஜைனப், உறுப்பினர் எஃப். ஹக்கீமா ஆகியோருடன் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப மாறும் சிறுவர் துஷ்பிரயோகம்!

நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப மாற்றமடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.   உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள...

SDIG ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் அதிபர் அசோக தர்மசேன உள்ளிட்ட அதிகாரிகளின்...