சிறுவர்கள் உலகை எதிர்கொள்ள தன்னம்பிக்கையை வழங்குவோம் – பிரதமர்

வன்முறையான ஒழுக்காற்று முறைகள் ஆகியவை சிறுவரின் தன்னம்பிக்கை, உணர்வுசார் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றில் நீடித்த தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

 

சிறுவர்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கும் ஒழுக்காற்று அணுகுமுறைகளை ஊக்குவிப்பதுடன், உடல் ரீதியான தண்டனைக்கு எதிரான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளிலும் இந்தப் புரிதல் பிரதிபலிக்கின்றது. இத்துறையில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள், சிறுவர்களை உடல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான வன்முறைகளிலிருந்து பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றன.

 

சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவது சிறுவர்களை பொருளாதாரச் சுரண்டலிலிருந்தும் பாதுகாப்பதைக் குறிக்கின்றது. இந்த ஆண்டு, அரசாங்கம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் சட்டத்தை வலுப்படுத்தி, தொடர்புடைய குற்றங்களுக்கான அபராதத்தை ரூ. 10,000 இலிருந்து ரூ. 100,000 ஆக அதிகரித்துள்ளது.

 

இந்தத் திருத்தம் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு, செப்டெம்பர் மாதம் 2026 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது.

 

தற்போதுள்ள சட்டம் 16 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடைசெய்கின்றது. வலுப்படுத்தப்பட்ட தண்டனைகள் சட்டவிரோதமான மற்றும் தீங்கு விளைவிக்கும் தொழிலில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான எமது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகின்றன.

 

இந்த நடவடிக்கைகள் ஒரு விரிவான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன: இலங்கையின் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் ஒவ்வொரு சிறுவரும், அவர்களின் பொருளாதார நிலைமை, புவியியல் அமைவிடம், மொழி, இனத்துவம், மதம், பாலினம், மாற்றுத்திறன் அல்லது வேறு எந்த வேறுபாடுகளையும் பொருட்படுத்தாது, பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், கல்வியறிவுடனும் தன்னம்பிக்கையுடனும் வளர்வதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும்.

 

எவ்வாறாயினும், இத்தகைய சூழலை அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மாத்திரம் உருவாக்க முடியாது. சிறுவர்கள் அச்சமின்றிப் பேசவும், அவமதிப்புக்கு உள்ளாகாமல் கற்றுக்கொள்ளவும், களங்கப்படுத்தப்படாமல் உதவியை நாடவும், வன்முறையின்றி வளரவும் கூடிய சூழல்களை உருவாக்குவதில் பெற்றோர், ஆசிரியர்கள், பராமரிப்பாளர்கள், சமூகங்கள், நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகமும் இந்தப் பொறுப்பைப் பகிர்ந்துகொள்கின்றன.

 

இந்த உலக சிறுவர் தினத்தில், எமது சிறுவர்களின் கருத்துகள், உணர்வுகள் மற்றும் அனுபவங்கள் முக்கியமானவை என்பதை உணர்ந்து, அவர்களின் கருத்துகளை நாம் மேலும் கவனமாகச் செவிமடுப்போம். அவர்களுக்கு கல்வியையும் வாய்ப்புகளையும் மாத்திரமன்றி, வேகமாக மாறிவரும் உலகை எதிர்கொள்வதற்குத் தேவையான பாதுகாப்பு, புரிந்துணர்வு மற்றும் தன்னம்பிக்கையையும் வழங்குவோம்.

 

எமது சிறுவர்களின் மனங்களை வலுப்படுத்தும்போது, எமது நாட்டின் எதிர்காலத்தையும் வலுப்படுத்துகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மீண்டும் உயர்வு!

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.   இது கடந்த ஆண்டின்...

ஞானசார தேரர் நாளை வரை விளக்கமறியலில்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நாளை (5) வரை விளக்கமறியலில் வைக்குமாறு...