பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் ஒன்றைத் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தியதன் மூலம் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் என உயர்நீதிமன்றம் இன்று (29) தீர்ப்பளித்துள்ளது.

 

அதற்காக 66 இலட்சம் ரூபாய் தொகையை இழப்பீடாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வாகனத்தின் புகைப்படத்துடன் மன்னிப்புக்கோரி மூன்று மொழிகளிலும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஞானசார தேரருக்கு அணிவிக்கப்பட்ட கைதிக்கான சீருடை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை நேற்று (05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.   இதற்கமைய, அவரது காவி...

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை...