உதய கம்மன்பில நிரபராதியாக கருதி விடுதலை!

அவுஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி 21 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

 

 

 

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதியான உதய கம்மன்பிலவுக்கு எதிராக முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

 

 

 

இதற்கமையவே அவர் விடுவிக்கப்பட்டதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

அவுஸ்திரேலிய தொழிலதிபரான பிரையன் ஷாடிக் (Brian Shaddick) என்பவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை போலி அதிகாரப் பத்திரத்தைப் பயன்படுத்தி விற்பனை செய்து 21 மில்லியன் ரூபாய் நிதி மோசடி புரிந்ததாகக் கூறி, கடந்த ‘நல்லாட்சி’ அரசாங்கக் காலத்தில் உதய கம்மன்பிலவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்களைக் குறைப்பதற்கும், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர நடவடிக்கை மூலமாக முரண்பாடுகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கும் இலங்கை மீண்டும்...

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் ஒன்றைத் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப்...