சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி நிர்ணயம்!

முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஷி வீரவங்ச மன்றில் ஆஜராகியிருந்தார்.

 

வழக்கு விசாரணையின்போது, தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும், அந்தத் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிவாதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

எனினும், குறித்த மேன்முறையீடு தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கை அறிக்கைகள் இதுவரை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

 

அவற்றைப் பெற்றுச் சமர்ப்பிப்பதற்கு மேலதிக அவகாசம் வழங்கிய நீதவான், வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

நாளை முதல் கொழும்பு முழுவதும் மெட்ரோ பஸ் சேவை!

கொழும்பு நகரம் முழுவதும் நாளை (29) முதல் மெட்ரோ பஸ் (Metro Bus) சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...