பல மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் எச்சரிக்கை

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

 

இன்று (28) முற்பகல் 11.30 க்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று இரவு 11.30 வரை செல்லுபடியாகும்.

 

குறிப்பிட்ட பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி நிர்ணயம்!

முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கினை எதிர்வரும்...

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...