நில்வலா மற்றும் கிங் கங்கை ஆகிய ஆறுகளை ஒட்டிய பகுதிகளுக்காக வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மேலும் நீடிப்பதற்கு நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நிலவும் மழை காரணமாக கடந்த 24ஆம் திகதி இந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல்கள் வெளியிடப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து மேலும் நீடிப்பதற்கும் அத்திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதற்கமைய, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கும் இந்த அபாய எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ள அத்திணைக்களம், இது தொடர்பில் அவதானம் செலுத்தி குறித்த பிரதேச வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


