ஹட்டனில் லொறியுடன், வேன் மோதி விபத்து

லொறி ஒன்றும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளர்.

 

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலேயே இன்று (26) முற்பகல் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

 

பொகவந்தலாவையில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த லொறியும், ஹட்டனில் இருந்து நல்லத்தண்ணி நோக்கி சென்ற வேனுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

விபத்தில் வேனுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அதன் சாரதியே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கிரிஷ் கொடுக்கல் வாங்கல்: நாமலிடம் சிறையிலேயே வாக்குமூலம் பதிவு!

முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்றுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான...

லண்டன் விபத்தில் இலங்கை மாணவி பரிதாப பலி

லண்டன் நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.   இவ்வாறு உயிரிழந்தவர் மெலீஷா பிரேமரத்ன என்ற 16 வயதுடைய மாணவி என தெரிவிக்கப்படுகிறது.   தனியார்...