முன்னாள் ஜனாதிபதியை நேரில் சந்தித்த புதிய சீனத் தூதுவர்

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுவாக முன்னெடுத்துச் செல்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.

 

அத்துடன், இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் உலகளாவிய சூழ்நிலைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

 

தாம் ஜனாதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் பேணப்பட்ட இராஜதந்திர உறவுகள் மற்றும் சீனாவுடனான நினைவுகளை மைத்திரிபால சிறிசேன இதன்போது நினைவு கூர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவும் ஒத்துழைப்பும் மேலும் வலுவடையும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

BreakingNews | 22 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது!

22 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது! அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 158 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

நவம்பர் முதல் TIN இலக்கம் கட்டாயம் – வௌியானது புதிய அறிவிப்பு

2026 நவம்பர் 01 ஆம் திகதி முதல் சில குறிப்பிட்ட செயல்பாடுகளின் போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது...