இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18) அதிகாலை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

 

வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டி அணிவது நாளை முதல் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப் பட்டிகளை அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் நாளை (19) முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   இதற்காக...

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் இன்று (18) கைது...