இன்று மாலை வெளுத்து வாங்கப்போகும் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (13) மாலையில் இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய உகந்த வளிமண்டல நிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அத்துடன், மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடனான சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் விபத்துகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக்...

ஜனாதிபதி பங்கேற்கும் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் பேரணி இன்று!

பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் பேரணி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (12) பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.   'எமது அரசாங்கத்திற்கு இரண்டு...