பிரபல நடிகை அபிராமி கலந்து சிறப்பித்த பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி

ஸ்டேயில் முபீ சலூன் ஏற்பாட்டில் மணமகள் அலங்காரம், ஆரி வேலைப்பாடு, தையல், மருதாணி அலங்காரம் மற்றும் கேக் பேக்கிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

இப்போட்டிகளில் பல மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை அபிராமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். மாணவர்களின் திறமைகளை பாராட்டிய அவர், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு ஸ்டேயில் முபீ சலூன் ஏற்பாட்டாளர் உவய்ஸ் முபீனா தலைமை தாங்கினார். மேலும், க்ரியேட்டிவ் சலூஷன் ஒருங்கிணைப்புக் குழுவினரும் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் இணைந்து செயல்பட்டனர்.

பல்வேறு துறைகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் விருதுகளைப் பெற்றுக்கொண்டதுடன், இந்நிகழ்வு அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அமேசன் கல்லூரி மற்றும் கேம்பஸின் வளர்ச்சிக்குபுதிய ஆலோசனை சபை -இல்ஹாம் மரிக்கார்...

கல்விச் சிறப்பு, தரமான கல்வி, தொழில்முறை மேம்பாடு மற்றும் நிறுவன வளர்ச்சி ஆகியவற்றில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வரும் அமேசன் கல்லூரி மற்றும்...

இந்த ஆண்டில் இதுவரை 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

இவ்வாண்டில் இதுவரை இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.   இன்று (15) நடைபெற்ற...