ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு

குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளரும்; சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகர, பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இந்தப் பதவி உயர்வு 2020 ஓகஸ்ட் 25 ஆம் திகதி முதல் திகதியிடப்பட்டு அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

முறைப்படியான பதவி உயர்வு செயல்முறையைக் கருத்திற் கொண்டு, ஷானி அபேசேகரவை பிரதிப் பொலிஸ் மா அதிபராக உயர்த்துவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளராக பணியாற்றி வரும் அபேசேகர, தனது பொலிஸ் சேவைக் காலத்தில் பல முக்கிய குற்றவியல் விசாரணைகளைக் கண்காணித்து வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அமேசன் கல்லூரி மற்றும் கேம்பஸின் வளர்ச்சிக்குபுதிய ஆலோசனை சபை -இல்ஹாம் மரிக்கார்...

கல்விச் சிறப்பு, தரமான கல்வி, தொழில்முறை மேம்பாடு மற்றும் நிறுவன வளர்ச்சி ஆகியவற்றில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வரும் அமேசன் கல்லூரி மற்றும்...

இந்த ஆண்டில் இதுவரை 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

இவ்வாண்டில் இதுவரை இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.   இன்று (15) நடைபெற்ற...