நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் – சஜித்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

25 உயிர்களைப் பலிகொண்ட இச்சம்பவம் தொடர்பில் அவர் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

​விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள சஜித் பிரேமதாச, சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சி மற்றும் திறமையின்மையே இந்த உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கும் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

​சிறைச்சாலைகளுக்குள் மரணங்கள் நிகழ்ந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என தற்போதைய ஜனாதிபதி முன்னதாக எதிர்க்கட்சியில் இருந்தபோது தெரிவித்திருந்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

அதே கொள்கை தற்போதைய நிர்வாகத்திற்கும் பொருந்தும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு செல்ல தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அச்சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது...

முன்னாள் எம்.பியின் மனைவி மாடியிலிருந்து விழுந்து பலி

மொனராகலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி டேஷானி குணரத்ன திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தணமல்வில பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் அவர்...