நியூயோர்க் நகரில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள கோனி தீவு (Coney Island) பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி நேற்று (4) இரவு 10:30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 6, 7, 12 மற்றும் 14 வயதுடைய நான்கு சிறுவர்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சந்தேக நபர்களைக் கண்டறிவதற்காக நியூயோர்க் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

முதியோர் இல்ல பாலியல் கொடூரம்- இலங்கை நபருக்குச் சிறை

நியூசிலாந்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் பராமரிப்பாளராகப் பணிபுரிந்த இலங்கையைச் சேர்ந்த நபரொருவருக்கு 10 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிலுஷன்...

இறுதி நிகழ்வுகள் முடியும் வரை ஈரான் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படாது...

ஆயதுல்லா அல் கமேனியின் இறுதி நிகழ்வுகள் முடியும் வரை ஈரான் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படாது. டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை