Date:

லேடி ரிட்ஜ்வேயில் நிறைந்து வழியும் கொரோனா தொற்றாளர்கள்

கொரோனா தொற்று காரணமாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த வைத்தியசாலையின் குழந்தைநல விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்துக்கு முன்னர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 30 சிறுவர்கள் மட்டுமே ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இந்த விடயத்தில் பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்பூசி போடப்படாத சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால் கடுமையான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இந்த நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்ட சிறுவர்களிடையே பல உறுப்பு தொற்று என்ற ஒரு நோய் பரவி வருவதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக இந்த நாட்களில் பரவி வரும் கடுமையான டெல்டா திரிபு காரணமாக, சிறுவர்களிடையே கொரோனா பரவ வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிவித்தார்.

சிறுவர்களைக் கொண்ட வீடுகளில் உள்ள பெரியவர்கள், வெளியிலிருந்து வைரஸை வீட்டுக்கு கொண்டு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், முடிந்தவரை சிறுவர்களின் வெளி உலகத் தொடர்பைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா தொற்றுக்குள்ளான பத்து குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மழை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல்லேகலயில் குவியும் ரசிகர்கள்!

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம மற்றும் தொடங்கொடைக்கிடைப்பட்ட பரகஸ்தொட்டை பகுதியில் மூன்று...

இலங்கை – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

சுப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி...

இன்றும் பரவலாக மழை பெய்யலாம்

இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின்...