இம்முறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் எதிர்ப்பார்ப்பான வெங்கலப் பதக்கத்தை வென்று வரலாற்றில் இடம்பிடித்த யுபுன் அபேகோனுக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்கட்சி தலைவர் வாழ்த்து செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்
அது ஒரு சிறந்த வெற்றி! யுபுன் அபேகோன், உங்கள் வெற்றி தொடர்பாக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உண்மையான வீரராக உங்கள் வெற்றி மனப்பான்மையானது மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்குகிறது.