பிரித்தானியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானிய மகாராணி எலிசபெத் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்க்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் பிரித்தானிய மஹாராணி தெரிவித்துள்ளார்.