Date:

மூன்று மணித்தியால மின்விநியோக தடை

நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் மூன்று மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும் இவ்வாறு 3 மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய குறித்த வலயங்களில் நண்பகல் வேளைகளில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், குறித்த வலயங்களில் இரவு வேளைகளில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் கால எல்லை  குறைக்கப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார உற்பத்தி நடவடிகைகளுக்காக நீர்தேக்கங்களின் நீர் மட்டம் 62 வீதமாக அதிகரித்துள்ள நிலையில் குறித்த  அறிவிப்பு விடுக்கப்படுவதாக  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...