அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட QR முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் தேவையற்றது எனத் தெரிவித்து முச்சக்கர வண்டிச் சாரதிகள் பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
5 லீற்றர் எரிபொருளில் ஒரு வாரத்துக்கு தமது வேலைகளைச் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, தமக்கு போதிய எரிபொருள் வழங்க வேண்டும் என்றும், கியூஆர் அமைப்பு தேவையற்றது என்றும் கூறியுள்ளனர்.
அந்த இடங்களில் பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.