கண்டி-கொழும்பு பிரதான வீதியில் பேராதனை தங்கொல்ல பிரதேசத்தில் பலத்த மழையின் போது பயணித்துக் கொண்டிருந்த தெல்தோட்டை-கொழும்பு பஸ் மீது மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.
இந்த விபத்து நேற்று (02) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பேருந்தில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.