கொட்டிகாவத்த முல்லேரியாவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவமொன்றில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லேரியாவ வங்கி சந்தியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான நிலையிலே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.