கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்று காலிமுகத்திடல் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து அதன் செயற்பாட்டாளர்களுக்கு உணவு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த ஹோட்டலில் இருந்து நாளொன்றுக்கு 500-600 உணவுப் பொதிகளை போராட்டக்காரர்கள் பெற்றுள்ளதாகவும் போராட்டம் தொடங்கியதில் இருந்து சமீப காலம் வரை இவ்வாறு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
இந்த உணவுப் பொதிகள் இலவசமாக வழங்கப்பட்டனவா அல்லது ஏதேனும் அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர் ஒருவரிடம் விசாரணை நடத்திய போது இவ்விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.