Date:

BREAKING : பயணத்தடை விவகாரம் குறித்து மற்றுமோர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, மாகாணங்களுக்கு இடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் யாவும் திங்கட்கிழமை முதல் முழுமையாக நீக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மே மாதம் 11 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில், மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்து.

அந்தத் தடை மே மாதம் 30ஆம் திகதி வரை மட்டுமே அமுல்படுத்தப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொ​ரோனா தொற்றின் வேகம் அதிகரித்தமையால், அந்தத் தடை நீடிக்கப்பட்டது.

எனினும், இதுதொடர்பில் கருத்துரைத்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, “பயணத்தடையை நீக்குவது தொடர்பில் உத்தியோகபூர்வமாக இதுவரையிலும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் – இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம்...

Breaking நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை

புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு...

கத்தார் மீதான ஏவுகணைத் தாக்குதல் முறியடிப்பு

கத்தார் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம்...