Date:

பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள இலக்கம் உள்ளீடு

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021 டிசம்பர் 14ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, குழந்தை பிறப்பின்போது, பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச்சான்றிதழில், ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கம் உள்ளீடு செய்யப்படவுள்ளது.

மேற்படி இரு திணைக்களங்களுக்கும் இடையில் இணையம் மூலம் தகவல்கள் பரிமாற்றம் இடம்பெறும். இந்த புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும், பரீட்சார்த்த திட்டம் கம்பஹா, தெஹிவளை, ஹங்குராங்கெத்த, குருநாகல், இரத்தினபுரி மற்றும் தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீகொட துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் கைது

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ மீது துப்பாக்கிப்...

அடுத்த ஐஜிபி வீரசூரிய

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த...

சிறுமியின் உயிரைப் பறித்த வாகன விபத்து

சிகிரியா, திகம்பதஹ வீதியில், பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காரொன்றின்...

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக...