கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா, களுகெலே – பொனஸ்டா பகுதியில் வைத்து நேற்று (30) இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட பிடியாணையை நிறைவேற்றுவதற்காக சந்தேகநபர்களில் ஒருவரின் வீட்டிற்கு பொலிஸார் சென்றபோது, குறித்த வீட்டில் மேலும் நான்கு இளைஞர்கள் தங்கியிருந்ததுடன், அவர்களுக்கும் இது தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், ஜனாதிபதியின் இல்லத்துக்குள் நுழைந்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு வரும் நிலையில் தாங்களும் தமது நண்பரின் வீட்டிற்கு தலைமறைவாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நுவரெலியாவைச் சேர்ந்த நபரின் வீட்டில் பதுங்கியிருந்தவர்கள் பிங்கிரிய, கொதட்டுவ, களுத்துறை மற்றும் நுவரெலியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்