Date:

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீர் தீ விபத்து

பண்டாரகம சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (30) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் ஓய்வு அறையில் தீ பரவியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எரிபொருள் பம்புகள் நிறுவப்பட்ட இடத்திற்கு அருகிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது, உடனடியாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் வரிசையில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் ஹொரணை மாநகர சபையின் தீயணைப்புத் துறை அதிகாரிகள் வந்து தீயை முற்றாகக் கட்டுப்படுத்தினர்.

தீயை அணைக்கும் முயற்சியில் பௌசர் சாரதி ஒருவரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...