கொழும்பின் சில பகுதிகளில் நாளைய தினம் நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை அறிவித்துள்ளது.
இதற்கமைய நாளை இரவு 9 மணி முதல் நாளை மறுதினமான ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், கொழும்பு 9, 10, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இவ்வாறு 11 மணித்தியாலம் நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.