தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெற 4 நேற்றிரவு 9 மணி வரை 4 மில்லியன் பேர் பதிவு செய்துக் கொண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
புதிய முறையானது நாடு முழுவதும் உள்ள 299 CEYPETCO எரிபொருள் நிலையங்களிலும் 34 லங்கா ஐஓசி (எல்ஐஓசி) எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் நேற்றைய தினம் சோதனை முயற்சியாக அமுல் செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
அதன்படி சிபெட்கோ எரிபொருள் நிலையங்களில் 87,652 வாகனங்களுக்கும் LIOC நிரப்பு நிலையங்களில் 5,193 வாகனங்களுக்கும் எரிபொருட்கள் வழங்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.